பிரதமர் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வரவேற்கிறேன் என மக்களவையில் மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி பேச்சு
மணிப்பூர் மக்கள் மாநில, ஒன்றிய பாஜக அரசின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். பிரதமர் மீது நாடே நம்பிக்கையை இழந்து நிற்கிறது.சொந்த மண்ணிலேயே இந்த மண்ணின் மைந்தர்கள் அகதிகளாக நிற்கும் அவலம் ஒன்றிய அரசுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது.மணிப்பூர் வன்முறைக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும்.
மேலும், பிரதமர் மோடி மீதான நம்பிக்கையை நாடு இழந்து நிற்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.