பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதுதான் இந்தியா கூட்டணியின் முதன்மையான குறிக்கோள் என்று விசிக தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணி கட்சிகளின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் மும்பையில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் மற்றும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான துரை ரவிக்குமார் ஆகியோர் மும்பை சென்றுள்ளனர்.
இந்த கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தூக்கி எறிந்து விடுவார்கள் என்றும் எனவே பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்பதுதான் இந்தியா கூட்டணியின் முதன்மையான குறிக்கோள் என்றும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post