திருவொற்றியூர் வடிவுடையம்மன் வரலாறு..!!
முன்னூறு ஆண்டுகளுக்கு முன் பூமியில் பிரளையம் ஏற்பட்ட பொழுது.., பிரளயத்திற்கு பின் புதிய உலகை பிரம்மா படிக்க வேண்டும் என சொன்னார். அப்பொழுது சிவபெருமான் தன் சக்தியால் வெப்பத்தை உண்டாக்கி அந்த வெப்பத்தில் இருந்து பிரளய நீரை ஓட வைத்தார்.
அந்த வெப்பத்தில் இருந்து தோன்றிய லிங்கத்தை “ஆதிபுரீஸ்வரர்” என அழைக்கப்பட்டார்.,
* 27 நட்சத்திரங்கள் இங்கு சிவபெருமானை வழிபட்ட 27 நட்சத்திர லிங்கங்கள் உள்ளன
* நந்தி தேவருக்காக சிவபெருமான் பத்ம தாண்டவம் ஆடிய தலம்.
அப்படி பிரளயம் ஏற்பட்ட பின் பார்வதி தேவி தாண்டவம் ஆடிய பின் அவரின் உடல் அரக்கனால் வெட்டப்பட்டது அப்போது சிதறிய ஒரு பாகம் தான் “திருவொற்றியூர் வடிவுடையம்மன்” கோவில். வடிவுடையம்மன், கொடிவுடையம்மன், திருவொடையம்மன் என மூன்று பேர் இருக்கின்றனர்.
வெள்ளிக்கிழமை தோறும் இங்கு அம்மனுக்கு சிறப்பு குங்கும அபிஷேகம் செய்யப்படும், அன்றைய நாளில் குங்கும அபிஷேகத்தை பார்த்து அந்த குங்கும பிரசாதத்தை வாங்கி நெற்றியில் இட்டால்.
* திருமணம் ஆகாத கன்னி பெண்களுக்கும் திருமணம் ஆகும்.
* திருமணம் ஆன பெண்கள் இட்டால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.
* தீராத நோய்கள் இருந்தால் இங்கிருக்கும் லிங்க தீஸ்வரரின் தீர்த்தத்தை வாங்கி குடித்தால் நோய்கள் குணமாகி விடும்.
* குழந்தை வரம் வேண்டுபவர்கள் இங்கிருக்கும் “குழந்தை முருகனை” வாரந்தோறும் சென்று தரிசனம் செய்தால் குழந்தை வரம் கிடைக்கும்.
12 ராசிக்காரர்களுக்கும் நட்சத்திரத்தில் தோஷம் இருக்கலாம்.., அல்லது நேரம் சரியில்லாமல் இருக்கலாம் அப்படி இருப்பவர்கள் இத்திருத்தலத்தில் லிங்கத்திற்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் கிரக தோஷங்கள் நீங்கி சிறந்த பலனை கொடுக்கும்,.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..