விசிகவை திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றி விடலாம் என்று சாதிய மதவாத கும்பல்கள் திட்டம் போடுகிறார்கள் என்று திருமாவாளவன் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி சாதிய வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து நெல்லையில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட விசிகவினர் பங்கேற்று முழக்கமிட்டனர்.
இந்த ஆர்பாட்டத்தில் பேசிய அவர்,
சனாதன அரசியலை மாணவர்களிடையே சங்பரிவார் அமைப்புகள் திட்டமிட்டு பரப்புகிறார்கள், மாணவர்களிடம் சாதி வெறியை தூண்டுவது அபத்தமானது. தென் மாவட்டங்களில் நடைபெறும் வன்முறையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்குநேரி பகுதியை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும் நாங்குநேரி சின்னதுரை, கோவில்பட்டி ஹரி பிரசாத் ஆகியோரின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.
மேலும், முற்போக்கான சிந்தனைகளால் தான் விசிக 30 ஆண்டுகளாக அரசியல் களத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறது, இன்று இந்தியா கூட்டணியிலும் இடம் பிடித்திருக்கிறது. எப்படியாவது சீண்டி விசிக வை திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்றி விடலாம் என்று சாதிய மதவாத கும்பல்கள் திட்டம் போடுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.