சீரியல் நடிகையை தாக்கிய கும்பகோண யானை..!
சன்டிவியில் இதற்கு முன் ஒளிபரப்பு செய்யப்பட்ட சந்திரலேகா, அத்திபூக்கள் மற்றும் வம்சம் போன்ற சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சந்தியா.
பல வருடங்கள் குறித்து நடிகை சந்தியா தனக்கு நடந்த துயரம் பற்றி அவரின் யூடிப் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். கடந்த 2006ம் ஆண்டு கும்பகோணத்தில் ஒரு சூட்டிங்கிற்காக சென்ற பொழுது.., கோவிலில் உள்ள யானைகளோடு சூட்டிங் எடுத்து கொண்டிருந்துள்ளார்.
அப்பொழுது யானைக்கு மதம் பிடித்து தன்னை தாக்கி விட்டது.., அந்த சமையத்தில் அதுகுறித்து பல வீடியோக்களை அவரவருக்கு ஏற்றவாறு வெளியிட்டிருந்தனர்.., அதிலும் பல செய்தி தொகுப்பாளர்கள்.., அவருக்கு மாதவிடாய் இருந்து இருக்கலாம்.., அவர் அணிந்து இருந்த உடை யானைக்கு பிடிக்காமல் இருந்து இருக்கலாம் என கூறினர்.
அதில் ஒருவர் கூட உண்மையான காரணம் குறித்து கேட்கவில்லை.., என்னை பலரும் தவறாக பேசுவது குறித்து என் தோழி லேகா எனக்கு போன் செய்து சொன்னார்.. நான் உயிர் பிழைக்க மாட்டேன் என நினைத்து கொண்டிருந்த சமையத்தில் கூட அங்கிருந்த நடன இயக்குனர்.., என்னிடம் தவறாக நடந்து கொண்டார். அதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.
தற்போது உண்மையான காரணம் குறித்து வெளியிடுவதற்கான நோக்கம்.., இன்று வரை என்னை பற்றி பல வதந்திகள் வந்து கொண்டு இருக்கிறது.., அதற்கு முற்று புள்ளி வைக்க தான் இந்த வீடியோ பதிவு.
யானை தாக்கப்பட்ட பின் எனக்கு ஆறு இடத்தில் அறுவை சிகிச்சை நடந்தது.., யானை என்னை தாக்கியதற்கான முக்கிய காரணம்.., சூட்டிங்கில் நான் யானைக்கு காசு கொடுப்பது போல காட்சி எடுக்கப்பட்டது, மூன்று முறை ரீடேக் செய்தார்கள்.., மூன்று முறையும் நான் யானைக்கு அதே காசை கொடுக்க சொன்னார்கள்.., அன்று சூட்டிங்கில் இருந்த யானை கோவில் யானை.
இவள் நம்மை யாமற்று கிறாள் என நினைத்த யானை கோபம் அடைந்து என்னை தாக்கியது.., மற்ற படி வேறு எந்த காரணமும் இல்லை. என யூடிப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..