நீங்கள் பார்க்க மறந்த பல்வேறு முக்கிய செய்திகள்..!! உங்கள் பார்வைக்காக..!!
சென்னை தாம்பரம் அருகே, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் தலைவர் தியாகராஜன் தலைமையில், புதிய கல்விக் கொள்கை என்கிற பெயரில் இந்தியை திணிக்க முயலும் ஒன்றிய அரசை கண்டித்தும், கோஷங்களை எழுப்பியும், விளம்பர பதாகைகளை ஏந்தியும் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கருப்பு பட்டை நெஞ்சில் குத்தியவாறு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ஐயாச் சாமி என்பவரது மனைவி சுந்தராம்பாள், காட்டிற்கு சென்ற போது, காட்டெருமை தாக்கி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வனவிலங்குகளால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே போதைப்பொருள் கடத்தப்படுவதாக, காவல்துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, தென்காசி மாவட்டம் திப்பனம்பட்டி பகுதியை சேர்ந்த கணேஷ், முருகப்பெருமாள் மற்றும் ரமேஷ் அலெக்ஸ் சற்குணம், சக்திவேல், மற்றும் முத்துக்குமார் ஆகிய ஆறு பேரிடம் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல், கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தருமபுரி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக வந்த இளம் பெண்கள் இருவர் பொதுமக்களிடம் தகாரில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கிருந்த ஆண் ஒருவரை தகாத வார்த்தைகளால் பேசி, தாக்க முயற்சித்துள்ளனர். இதனை கண்ட ரோந்து பணி காவல்துறையினர், அவர்களிடம் விசாரித்த போது, தாங்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும், காசிமேடு பகுதியில் இருந்து வருவதாகவும், எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது என காவலர்களிடமும் வாக்குவாதாத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் கீழத்தெருவை சேர்ந்த மாரிமுத்து சென்னையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் மயிலாடுதுறையை சேர்ந்த பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் மற்றும் மகளிர் காவல் துறையினர் மாரிமுத்துவை கைது செய்து, போக்ஸோ மற்றும் குழந்தை திருமண தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோவிலில் மாசி திருவிழா கடந்த செவ்வாய்கிழமை அன்று தொடங்கியது. அதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அம்மன் கரக ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும், மேலும் திருமணம் மற்றும் குழந்தை வரம் வேண்டி ஏராளமான பெண்கள் லட்ச தீபம் ஏந்தி ஊர்வலம் வந்தனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த உப்பரப்பள்ளி கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாயத்தையும் மற்றும் கூலி வேலையும் செய்து வருகின்றன. இந்நிலையில் வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து நெல், கரும்பு போன்ற பயிர்களை சேதப்படுத்தி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..