உங்கள் ஊர் செய்திகள்..!! உங்கள் பார்வைக்காக..!! களத்தில் மதிமுகம்..!!
சென்னை பள்ளிக்கரணை அம்பாள் நகர் குளத்தில் கொக்கு ஒன்று சிக்கியுள்ளது. இதனை கண்ட அப்பகுதிமக்கள் மேடவாக்கம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில் அங்கு வந்த அதிகாரிகள், சில மணி நேர போராட்டத்திற்கு பின் கொக்கை பத்திரமாக மீட்டு வேளச்சேரியில் உள்ள வன பாதுகாப்பு மையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.
மயிலாடுதுறையில் தியாகி வள்ளியம்மையின் 111- வது ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது உருவச் சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உமா மகேஸ்வரி, அரசு சார்பில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நினைவு மண்டபத்தை பார்வையிட்டார். இதில் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுன சங்கரி வட்டாட்சியர் மகேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
திருப்பத்தூர் மாவட்டம் பெங்களூர், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த இந்திரா, நீலேஷ் பிரகாஷ், சைமன் பிரதிஷ்டார் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர், வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். இந்தவிபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உணவு திருவிழா நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, பல்வேறு வகையான அசைவ உணவுகளை சமைத்து காட்சிப்படுத்தியுள்ளனர். இதனை கல்லூரி செயலாளர் முத்துவேல் பார்வையிட்டு, மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அண்ணாசிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் வழக்கறிஞர் லெனின் தலைமையில், அனைத்து கட்சியினர் சார்பில், தேசிய கல்வி கொள்கையை ஏற்காத, ஒன்றிய அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.
மகா சிவராத்திரி திருவிழா வருகின்ற 26-ஆம் தேதி நாடெங்கும் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனதிருமடத்திலிருந்து, 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..