“கல்வியும், மருத்துவமும் இரு கண்கள்..” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு..!!
கல்வியும், மருத்துவமும் தான் திமுக அரசின் இரண்டு கண்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், முதல்வர் மருந்தகம் திட்டம் தொடங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி இன்று, தமிழகத்தின் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகம் திட்டத்தை சென்னை தியாகராய நகரில் காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதையடுத்து மதுரையில் 51 இடங்களில், பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மற்றும் தகவல் தொழில் நுட்பதுறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதல்வர் மருந்தகத்தை திறந்து வைத்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மேயர் இந்திராணி ஆகியோர் பங்கேற்றனர். இந்த மருந்தகங்களில் குறைந்த விலையில் ஜெனரிக் மற்றும் பிற மருந்து, மாத்திரைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தனியார் மருந்தகங்களில் 70- ரூபாய்க்கு கிடைக்கும் மருந்துகள், இங்கு 11 ரூபாய்க்கு மட்டுமே கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் பேசிய அவர், மக்கள் மீதான பொருளாதார சுமையை குறைக்கவே முதல்வர் மருந்தகங்களை திறக்க திட்டமிட்டதாகவும், நீரழிவு, ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கான மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..