நீங்கள் பார்க்க மறந்த பல்வேறு முக்கிய செய்திகள்..!! உங்கள் பார்வைக்காக…!!
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் வாசல் அருகே பூக்கடை வியாபாரி கண்ணன் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைப்பதற்குள் வாகனம் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மீட்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் காவலர்கள் நடத்திய சோதனையில், கஞ்சா விற்பனை வழக்கில் தலைமறைவாக இருந்த மகேஷ், அடிதடி வழக்கில் தலைமறைவாக இருந்த சின்னராசு மற்றும் பூபதி, கணேஷ் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட ஆட்டோவையும் பறிமுதல் செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற மீன் பிடி திருவிழாவில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. முன்னதாக ஊர் பெரியவர்களால் வெள்ளை விடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாட்டு வகை மீன்களான விரால், சிலேபி, அயிரை, கெண்டை ஆகிய மீன்கள் குளத்தில் விடப்பட்டுள்ளது. மீன்பிடியில் பங்கேற்பவர்களிடம் 250 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நெல்லையில், இன்னர் வீல் கிளப் ஆப் திருநெல்வேலி மற்றும் இன்னர் வீல் டிஸ்ட்ரிக்ட் 321 சார்பில் கர்பப்பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை பாளையங்கோட்டை போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் சுரேஷ் துவங்கி வைத்தார். இதில் தேசிய தலைவர் சுனிதா ஜெயின், முன்னாள் மாவட்ட தலைவர் அமுதா ராஜேந்திரன், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட இன்னர் வீல் கிளப் பெண் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு உரை நிகழ்த்தினர்.
தமிழகம் முழுவதும் மார்ச் முதல் வாரத்தில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் சந்தைமேடு பகுதியில் செயல்பட்டு வரும் வி.ஆர்வி நிதியுதவி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் செய்முறை தேர்வை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்..
திருப்பத்தூர் மாவட்டம் பிச்சைமணி என்பவரது வீட்டில் அரசு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில், அதிகாரிகள் நடத்திய சோதனையில் 74 அரசு மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து பிச்சைமணி மற்றும் விஜி, ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..