உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சாலை, காங்கயம் சாலை, மத்திய பேருந்து நிலையம், உட்பட மாநகரின் பல்வேறு பகுதிகள் பனி மூட்டம் நிலவியதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டவாறு சென்றனர்.
கரூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில் அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் 11 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் கவிதா உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். அதனை தொடர்ந்து திருமண ஜோடிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் சீதனமாக வழங்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த ஆனந்த சுப்பிரமணியன் என்பவரது வீட்டின் மொட்டை மாடியில் ஆள் நடமாட்டம் இருந்ததை உணர்ந்துள்ளார். அப்போது அங்கே சென்று பார்த்தபோது, வடமாநிலத்தவர் தங்கியிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், நடத்திய விசாரணையில் தூத்துக்குடியில் வேலை பார்த்து வருவதாகவும், மனப்பிறழ்வு காரணமாக இங்கே தங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இவரோடு தங்கியிருந்த இரண்டு பேர் தப்பிச்சென்ற நிலையில், அவர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்த வசந்தா என்பவருக்கு சொந்தமான வீட்டில் இருந்து 100 பவுன்நகைகள் மற்றும் இரண்டு கிலோ வெள்ளிபொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து உடையார்பாளையம் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி தலைமையிலான காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் மற்றும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில், தக்காளி விளைச்சல் அதிகமானதால், தக்காளியின் விலை பெருமளவு சரிந்து ஒரு கிலோ தக்காளி 7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் போக்குவரத்து செலவு கூட கட்டுப்படியாகவில்லை என்றும், விவசாயிகளும், வியாபாரிகளும் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..