துன்பங்கள் நீக்கும் வாராஹி வழிபாடு..!! 21 நாட்கள் செய்தால் கிடைக்கும் வரம்..!!
வாழ்க்கையில் இன்பங்களை பார்க்காத மனிதர்களும் துன்பங்களை சந்திக்காத மனிதர்களும் இல்லை.., அப்படியாக நமக்கு சந்தோஷம் கொடுக்கும் கடவுளுக்கு நன்றிகள் ஏதும் சொல்கிறோமா என்றால் 100ல் 4% பங்கு மனிதர்கள் மட்டுமே சொல்கிறார்கள்…
அதுவே கஷ்டம் என்றால்.. அதை சரி செய்வதற்கான வழியை தேடுபவர்களை விட கடவுளிடம் சென்று வேதனையை சொல்பவர்களே அதிகம்.. அப்படியாக நமக்கு வரும் கஷ்டங்களும் பல வகைகளில் வந்து சேருகிறது.. பணப்பிரச்சனை, உடல் நலப்பிரச்சனை, ஏவல் சூனியம், திருமணத்தடை போன்ற பல்வேறு பிரச்சனைகள் உண்டு.. அதற்கான தீர்வுகளை “வாராஹி அம்மன்” சொல்கிறார்…
வாராஹி அம்மன் வழிபாட்டை, வெள்ளி, செவ்வாய், ஞாயிற்று கிழமை களில் மட்டுமே செய்ய முடியும். தொடர்ந்து 21 வாரம் அல்லது நாட்கள் இந்த வாராகி வழிபாட்டை செய்யலாம்.
தொடர்ந்து 21 நாள்கள் இந்த வழிபாடு செய்யலாம், அல்லது வாரம் தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை, 21 வெள்ளிக்கிழமை வழிபாடு செய்யலாம்.
21 செவ்வாய்க்கிழமை, 21 ஞாயிற்றுக்கிழமை என்று விரதம் மேற்கொள்ளலாம். இந்த வழிபாட்டை ஒவ்வொருவரும் மாலை 6:30 மணிக்கு மேல் தொடங்க வேண்டும்.
பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து வாராஹி படம் வைத்து அந்த படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.
மேலும் வாராஹி அம்மனுக்கு நெய்வைத்தியம் வைத்து வழிபடுவது நன்மையை தரும். வாராஹி அம்மனுக்கு கிழங்கு வகைகள் மற்றும் மாதுளம் வைத்து வழிபாடு செய்ய செய்யலாம்.
இந்த நெய்வைத்தியம் வைத்து வாராஹி அம்மனிடம் மனதார வேண்டிக்கொள்ள நம்முடைய அசிங்கம் அவமானம் எல்லாம் தகர்த்து நம்மை காத்தருள்வாள்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..