வந்தே பாரத் ரயில் உடனடியாக சீரமைக்கப்பட்டு மீண்டும் ரயில் சேவை தொடங்க உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 30ம் தேதி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில் மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் காந்தி நகர் நோக்கிச் சென்றபோது எருமை மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
If you look at the heart of any Railwaymen, you will see Vande Bharat engraved on it. So lets not mock an untoward incidence further. The Train is back in action because of our brave technicians. Onwards and Upwards.🇮🇳
— Prashant Arora 🇮🇳 (@PrashantIRAS) October 7, 2022
மேலும் இந்த விபத்து குறித்து பேசுகையில் விபத்தின் போது ரயில் சுமார் 140 கி மீ வேகத்தில் சென்று கொண்டிருந்தது. பிரேக் போட்டால் ரயில் நிலை தடுமாறி பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்திருந்தார்.
இதனால் ரயில் என்ஜின் முன்பக்கம் சேதமடைந்தது பெரிய பேசு பொருளாக மாறியது. இந்த விபத்து ஏற்பட்ட போதும் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும் 3 எருமை மாடுகள் உயிரிழந்தது.விபத்து ஏற்பட்ட வந்தே பாரத் ரயில் விரைவில் சீரமைக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.
Less than a week after it’s inauguration Vande Bharat train damaged in #Gujarat today morning.
Its just few days Modi inaugurated this train.#GujaratElections2022 pic.twitter.com/kbUGke2DxV
— FinalWarAgainstCorruption (@FWACorruption) October 6, 2022
இந்நிலையில் இன்று, மும்பை சென்ட்ரல் டெப்போவில் முன் பெட்டியின் மூக்கு கவர் புதிதாக மாற்றப்பட்டது, கூடுதல் வேலைப்பாடுகள் செய்யப்பட்டு மீண்டும் ரயில் சேவை தொடங்க உள்ளது என்றார். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என கூறினார்.