தங்களுக்கு திருமணமானதை வெளியே சொன்னதால் அர்ணவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாக திவ்யா புகார் தெரிவித்திருந்த நிலையில், திருமணத்தை போட்டோ ஷீட் என சித்தரிக்குமாறு அர்னவ் பேசிய ஆடியோ ஒன்றை திவ்யா வெளியிட்டுள்ளார்.
பிரபல சின்னத்திரை நடிகை திவ்யா செவ்வந்தி தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். இவர் செல்லம்மா தொடரில் நடித்தபோது நடிகர் அர்ணவை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் திவ்யா நேற்று சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தன்னை கணவர் அடித்து துன்புறுத்துவதாகவும், கணவர் தன்னை அடித்ததால் எப்போது வேண்டுமானாலும் தனது கரு கலையலாம் என்றும் பேசி திவ்யா வீடியோக்களை வெளியிட்டு இருக்கிறார்.
இதை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதில் போரூர் மகளிர் காவல் நிலைய போலீசார் திவ்யாவிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையில் அர்ணவ் கூறுகையில் என் மனைவி தம் கருவை கலைக்க நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிடுகிறார். அவளுக்கு ஏற்கனவே திருமணமானது எனக்கு தெரியும். ஆனால் விவாகரத்து செய்து விட்டதாக என்னிடம் பொய் சொல்லி என்னை திருமணம் செய்து கொண்டார் என்று ஆவடி கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தற்போது திருமணத்தை போட்டோ ஷீட் என சித்தரிக்குமாறு அர்னவ் பேசிய ஆடியோ ஒன்றை திவ்யா வெளியிட்டு திருப்புமுனையை ஏற்படுத்திய உள்ளார்.