ADVERTISEMENT

”தென்தமிழ்நாட்டை அழிக்க காத்திருக்கும் பேராபத்து”… வைகோ முன்னெச்சரிக்கை…!

Loading

கூடங்குளம் அணுஉலைகளை மூடி தென்தமிழ்நாட்டை அழிவிலிருந்து காக்க வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கூடங்குளம் அணுஉலைகளை மூடக்கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில்:

கூடங்குளம் அணுஉலைகளால் தென்தமிழ் நாடே அழிந்துபோகும் என நான் பலமுறை எச்சரித்து வருகிறேன். உதாராணத்திற்கு ஜப்பானில் புகுசிமா அணுஉலை அமைக்கப்பட்ட போதே மக்கள் எதிர்த்தார்கள். அமெரிக்காவில் 3 மைல் தீவில் அமைக்கப்பட்ட அணுஉலையால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டடனர். அதன்பின்னர் சோவியத் ரஷ்யாவில் அமைக்கப்பட்ட செர்னோபில் அணுஉலையில் விபத்து ஏற்பட்டு இலட்சக்கணக்கான மக்கள் வெளியேறினார்கள்; எண்ணற்றவர்கள் இறந்தார்கள். ஜப்பானில் அணுஉலைக் கழிவு நீரை பசிபிக் கடலில் திறந்துவிட்டுள்ளார்கள். இதனால் ஜப்பானியர்கள் அணுஉலையை எதிர்த்துப் போராடி வருகிறார்கள்.

இதே போன்று கூடங்குளம் அணுஉலையில் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்ற அணுஉலைக் கழிவு நீரை வங்காள விரிகுடாவில்தான் திறந்துவிடுவார்கள். இதனால் இடிந்தகரை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கிராமங்கள் அழிந்துபோகும் என்று எச்சரித்துள்ளார்.நம் தலைமீது பேராபத்து கத்திபோல் தொங்குவதால், கூடங்குளத்தில் அணுஉலைகளை மூடுவது ஒன்றுதான் எதிர்காலத்தில் தென்தமிழகத்தை பாதுகாக்கும் என்பதை எண்ணி அரசுக்குச் சொல்வதோடு, இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத மத்திய அரசுக்கு எச்சரிக்கை செய்வதாக கூறியுள்ளார்.

நிலவில் கால் வைக்கலாம், ஆனால் தமிழ்நாட்டின் ஒரு பகுதி பூமியே அழிந்துபோகும் என்பதை உணர்ந்து, கூடங்குளம் அணுஉலைகளை மூடி தென்தமிழ்நாட்டை அழிவிலிருந்து காக்க வேண்டும் என அரசுகளுக்கு வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
ADVERTISEMENT

Related Posts

Next Post
  • Trending
  • Comments
  • Latest

Trending News

ADVERTISEMENT