“மாமன்னன்” படப்பிடிப்பில் வைகை புயல் வடிவேலு இணைந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்ததாக “மாமன்னன்” என்ற படத்தை இயக்குகிறார்.
இதில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். பஹத் பாசில் மற்றும் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. இப்படத்தில் சைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்படத்திற்கான போஸ்டர் வெளியானது.
இந்நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பில் நேற்று(மார்ச்.14) வைகைப்புயல் வடிவேலு இணைந்தார். இதையடுத்து, இயக்குனர் மாரி செல்வராஜ், வடிவேலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவரை வரவேற்றார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.