ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 32 ஆண்டுகளுக்கு பிறகு பேரறிவாளன் புழல் சிறையிலிருந்து இன்று(மார்ச்.15) ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் கடந்த 32 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். பரோலில் இருந்தாலும் வெளியே செல்ல முடியாததால், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என பேரறிவாளன் கோரியிருந்தார். பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்க மத்திய அரசு தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில்,கடந்த 9-ஆம் தேதி பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதில், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளதால் ஜாமீன் வழங்கப்படுகிறது என்றும், ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் மாதந்தோறும் பேரறிவாளன் ஆஜராக வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, பேரறிவாளன் இன்று(மார்ச்.15) ஜாமீனில் விடுதலையானார். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அற்புதம்மாள், பேரறிவாளனுக்கு கிடைத்திருக்கும் இந்த பிணை இடைக்கால நிவாரணம் தான்.
பிணை கிடைக்க காரணமான அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. முழுமையான விடுதலை பெறும் வரை உங்களின் ஆதரவு இருக்கும் என்ற நம்பிக்கையுடன் எங்கள் போராட்டம் தொடர்கிறது என தெரிவித்துள்ளார்.