குரங்கம்மை நோய்க்கு தடுப்பூசி தயாரிப்பு..!! சீரம் இந்தியா நிறுவனம் சொன்ன குட் நியூஸ்..!!
குரங்கம்மை தொற்றுக்கு நோய்க்கான தடுப்பூசியை சீரம் இந்தியா நிறுவனம் தயாரித்து வருகிறது.
கடந்த 2019ம் ஆண்டு கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவிய நிலையில் லட்சம் கணக்கானோர் உயிர் இழந்தனர்.., பெரும்பாலானோர் அதனால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர்.. கொரோனோ தொற்றை தொடர்ந்து குரங்கம்மை பாதிப்பு பரவி வருகிறது.
ஆப்பிரிக்காவில் மட்டும் பரவி வந்த இந்த குரங்கம்மை நோய், தற்போது ஐரோப்பிய, ஆசிய நாடுகளிலும் பரவ ஆரம்பித்துள்ளது. அதையடுத்து அந்த தொற்றை, உலகளவில் பொது சுகாதார அவசர நிலையாக, உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அறிவித்தது. நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், மற்றும் வங்கதேசத்திலும் குரங்கம்மை கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதனையடுத்து பொதுமக்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஒன்றிய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் நாட்டில் உள்ள 32 ஆய்வகங்களில் குரங்கம்மை பரிசோதனை செய்யவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் மக்களின் நலனை கருதி குரங்கம்மை தொற்றுக்கு தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது..
அதற்கான பணிகளை சீரம் இந்தியா நிறுவனம் தொடங்கியுள்ளது. அது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவல்லா ஆபத்தில் இருக்கும் லட்சக்கணக்கான நோயாளிகளின் உயிரை காக்க, குரங்கம்மைக்கான தடுப்பூசியை தயாரிக்கும் பணியில், தற்போது ஈடுபட்டுள்ளார்.
இன்னும் சில மாதங்களுக்குள் தடுப்பூசி தொடர்பான நல்ல செய்தி வரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். எனவே மக்கள் அச்சமின்றி இருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..