உத்தரகாண்ட் இடைத்தேர்தல்…! கொடி நாட்டிய அந்த கட்சி..?
பத்ரீநாத் இடைத்தேர்தல் காரணம் :
உத்தரகாண்ட் மாநிலத்தில், காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற ராஜேந்திர சிங் பந்தாரி, திடீரென கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதனால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஜூலை 10ம் தேதி பத்ரிநாத் மற்றும் மங்களூரு என இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
பத்ரிநாத் தொகுதியை பொறுத்தவரை, பாஜகவும் காங்கிரஸும் மாற்றி மாற்றி வெற்றி பெற்று வந்த நிலையில் காங்கிரஸ் தற்போது வெற்றி பெற்றுள்ளது.
இந்த இரண்டு தொகுதியிலும் கடந்த 2002 ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தான் வெற்றி பெற்று இருக்கிறது. நடுவில் இரண்டு முறை மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது.
இந்த தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை எம்எல்ஏ-வாக இருந்த “சார்வாட் கரீம் அன்சாரி” 2012ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 2022ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் சார்பில் மீண்டும் சார்வாட் கரீம் அன்சாரி வெற்றி பெற்றார்.
மங்களூர் இடைத்தேர்தல் காரணம் :
ஆனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் தேதி உடல் நலக்குறைவால் இவர் உயிரிழந்துவிட்டார். அதனையடுத்து இந்த தொகுதிக்கு கடந்த 10ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டு இன்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.
இந்த இரண்டு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு வருகிறது. காலை முதல் எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கைப்படி இரண்டு தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலையில் இருக்கின்றனர்.
– லோகேஸ்வரி.வெ