பாஜகவிற்கு விழுந்த அடுத்த அடி..! அண்ணாமலை கொடுத்த பதில்..!
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ புகழேந்தி காலமானதை தொடர்ந்து அந்த மாவட்டத்திற்கு இந்த மாதம் ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுது.
20 சுற்று எண்ணிக்கை வாக்கு நிலவரம் :
இன்று காலை 7 மணிமுதல் வாக்கு எண்ணப்பட்டது.. 20 சுற்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 1,23,095 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா பிரமாண்ட வெற்றியைப் பெற்றுள்ளார்.
பாமக வேட்பாளர் சி. அன்புமணி 56,030 வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 10,009 வாக்குகள் பெற்றுள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா உட்பட 27 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.
இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, “விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் முழுமையாக வரட்டும், அதுகுறித்து ஆராய்ந்து விட்டு பின் நான் உங்களிடம் பேசுகிறேன். தமிழகத்தைப் பொறுத்தவரை, இடைத்தேர்தல் முடிவானது எப்போதும் ஒரு கேள்விக்குறி என சொல்லலாம்.
இடைத்தேர்தலை தொடர்ந்து ஆளுங்கட்சி தான் ஜெயிதிருக்கிறது. ஆனால் மறுநாளே பல முடிவுகள் மாறியிருக்கிறது, இந்த முறை விக்கிரவாண்டியில் அப்படித்தான் நடக்கப்போகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலைப் போல இந்த தேர்தல் நடக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் முறையிட்டோம். ஆனால், பல இடங்களில் முறைகேடுகள் நடந்துள்ளது. இடைத்தேர்தலின் முடிவுதான் தமிழக மக்களின் மனநிலை என்று நினைத்தால், அது தவறு.
இருந்தாலும், மக்களின் இந்த முடிவை பாஜக ஏற்றுக்கொண்டது. இந்த தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் அனைவரும் இணைந்து கடுமையாக களப்பணியில் வேலை செய்தோம். ஆனால் கிடைத்து என்னவோ 50 ஆயிரம் வாக்குகள் மட்டும் தான். பாஜகவில் இதுவும் ஒரு சாதனை என பேட்டி அளித்துள்ளார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..