UPI New Rules NPCI Announcement 2025
என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) ஆனது யுபிஐ (UPI) சேவை வழியாக பணம் அனுப்பும் செயல்முறையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை கொண்டுவர உள்ளது. UPI New Rules NPCI Announcement 2025
இந்த புதிய விதிமுறைகள் ஜூன் 2025 இறுதிக்குள், இன்னும் சரியாக வேண்டும் என்றால் ஜூன் 30 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்படி திட்டமிடப்பட்ள்ளது. இது பீர் டு பீர் (Peer to Peer – P2P) மற்றும் பீர் டு பீர் மெர்ச்சன்ட் (Peer to Peer Merchant – P2PM) பரிவர்த்தனைகள் ஆகிய இரண்டிற்குமே பொருந்தும்.
என்பிசிஐ-யின் புதிய வழிகாட்டுதலின் கீழ், அனைத்து யுபிஐ ஆப்களும் பணப்பரிவர்த்தனைக்கு முந்தைய விவரங்கள் குறித்த பக்கத்தில் (Pre-transaction details page) பணத்தை பெறுபவரின் பெயர் மட்டுமே தோன்றுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த பெயர் நேரடியாக நம்பகமான மூலத்திலிருந்து வர வேண்டும்; அதாவது வேலிடிட்டி செய்யபட்ட விலாசத்தை கொண்டுள்ள பேங்க் அக்கவுண்ட் பெயராக இருக்க வேண்டும். UPI New Rules NPCI Announcement 2025
இப்படி சரிபார்க்கப்பட்டு பெயர் தவிர்த்து க்யூஆர் குறியீடுகளில் இருந்து பெறப்பட்ட பெயர்கள் அல்லது பணம் செலுத்துபவர் உருவாக்கிய பெயர்கள் போன்ற வேறு எந்த பெயர்களையும் யுபிஐ ஆப்கள் காட்டக்கூடாது. இது தவறான நபர்களுக்கு பாதை அனுப்பும் குழப்பத்தை தவிர்க்கும் என்று என்பிசிஐ நம்புகிறது. UPI New Rules NPCI Announcement 2025
இதனுடன், ஆப்பிற்க்குள் பணம் அனுப்பும் நபரின் பெயரை மாற்ற பயனர்களை அனுமதிக்கும் எந்தவொரு விருப்பத்தையும் யுபிஐ ஆப்கள் முடக்க வேண்டும் என்றும் என்கிற புதிய விதியையும் என்பிசிஐ கொண்டுவரவுள்ளது.
இன்னும் எளிமையாக கூற வேண்டும் என்றால், உங்கள் காண்டாக்ட் லிஸ்டில் சேமிக்கப்பட்ட பெயரை நம்புவதற்கு பதிலாக, பெறுநரின் உண்மையான பெயரை அவர்களின் வங்கி பதிவுகளில் தோன்றுவது போல் நீங்கள் காண்பீர்கள்.
பணத்தை அனுப்பும் முன், உறுதிப்படுத்தல் பட்டனை அழுத்துவதற்கு முன், பணம் சரியான நபருக்கு செல்கிறதா என்பதை நீங்கள் சரிபார்க்க முடியும் என்பதை இந்த புதிய மாற்றம் உறுதி செய்கிறது.
பேங்க் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் பற்றிய துல்லியமான தகவல்களை யுபிஐ பயனர்களுக்கு வழங்குவதே, இந்த புதிய மாற்றத்தின் முதன்மையான குறிக்கோளாக இருக்கும், மேலும் அவர்களின் நிதிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும், சாத்தியமான குழப்பங்களை நீக்கும்.
ஆன்லைன் கட்டணத்தின் போது நீங்கள் தவறுதலாக, தவறான காண்டாக்ட்-ஐ தேர்ந்தெடுத்தால், பரிவர்த்தனை செயல்படுத்தப்படுவதற்கு முன்பு உங்களுக்கு எச்சரிக்கப்படும்.
இந்த புதிய மாற்றம் நாடு முழுவதும் உள்ள கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) மற்றும் பீம் (BHIM) போன்ற பிரபலமான தளங்களின் பயனர்களுக்கு பெரிதும் பயனளிக்கும்.
இந்த அனைத்து தளங்களும் இந்த மாற்றத்தை தங்கள் அமைப்புகளில் உடனடியாக ஒருங்கிணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.