காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி பாஜக-வில் இணைந்தார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி பாஜக-வில் இணைந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி டெல்லியில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரதமர் மோடியின் தலைமையில் சர்வதேச அளவில் இந்திய தேசம் பல சாதனைகளைப் புரிந்து வருவதால் அவரின் தலைமையில் அரசியல் பணியாற்ற பாஜகவில் இணைந்துள்ளதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, விஜயதரணி வருகை தமிழக பாஜகவுக்கு மேலும் வலுசேர்க்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் விஜயதரணி இணைந்துள்ளதாக ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.