ஆம்பூரில் 33 அடி ஸ்ரீ குழந்தை முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா காண கண்கோடி வேண்டும்..
ஆம்பூர் அருகே 33 அடி ஸ்ரீ குழந்தை முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கிளி கிராமத்தில் அருள்மிகு குழந்தை முனீசுவரர் ஆலயத்தில், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹுதி, உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து புனிதநீர் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு முனீசுவரர் சிலை மீது புனித நீர் ஊற்றப்பட்டு திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழா நடைப்பெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.