ரவுடி பேபி மீனா..! ஒரே போஸ்ட் குவியும் லைக்ஸ்..!
நடிகை மீனா :
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா அதன் பிறகு “ஒரு புதிய காதல்” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
ரஜினி, கமல், அஜித் என பல முன்னனி பிரபலங்களுடனும் நடித்துள்ளார். இவர் தற்போது தமிழில் இயக்குநர் சரவணன் இயக்கத்தில் ரவுடி பேபி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் 90களின் முன்னனி நடிகையாக புகழபடு்ம் மீனா மலையாளத்தில் ஆனந்தபுரம் டைரி படத்தில் நடித்து கொண்டு இருகிறார்.
ஐஸ்லாந்தில் மீனா :
நடிகை மீனா, ஐஸ்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இந்நிலையில் மீனா புஷ்பா 2 பட பாடலுக்கு நடனமடியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
புஷ்பா பாடலுக்கு நடனமாடும் மீனா:
சமூக வளைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் மீனா அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோகளையும் வெளியிட்டு வருகிறார்.அதன்படி ஐஸ்லாந் நாட்டில் புஷ்பா 2ஆம் பாகத்தில் இடம்பெற்ற பாடலுக்கு நடனமாடி அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் இந்த வீடியோவை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவிற்கு லைக்ஸ் மற்றும் கமென்ட்கள் குவிந்து வருகின்றது.
– பவானி கார்த்திக்.