மத்திய உள்துறை அமைச்சர் அமீத்ஷா தமிழ்நாட்டிற்கு வருகை..
நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமீத் ஷா தமிழ் நாட்டிற்கு தேர்தல் வியூகத்தை முறைப்படுத்தும் விதமாக வந்திருந்தார்.
25 க்கு மேற்பட்ட மிக முக்கியமான ஆளுமைகளை சந்தித்து பேச இருப்பதாக செய்திகள் வெளியாகியது. உண்மையில் அவர் சந்தித்து பேசும் முக்கியமான ஆளுமைகள் யார் என்று தெரிந்து கொள்ள முடிந்தது.
அவர்களில் வின் தொலைக்காட்சி தேவநாதன், விளையாட்டு துறையைச் சேர்ந்த லக்ஷ்மண் சிவராம கிருஷ்ணன், இயக்குநர் ஏ.ஆர்.ராஜசேகரன், இந்தியா சிமெண்ட்ஸ் ஸ்ரீனிவாசன், செட்டிநாடு சிமெண்ட்ஸ் இயக்குநர், தாஜ் குழுமத்தில் மிக முக்கியமான நபர்கள், தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன், நல்லி குப்புசாமி செட்டியார், பாஸ்கரன், அனிதா குப்புசாமி, பால்துரை , இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஆர்காட் நவாப் முகம்மது அலி, டேப்லட்ஸ் இந்தியா, பி.கே.எஃப், இயக்குநர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி, ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
மேற்கண்ட நபர்கள் எந்த அளவுக்கு பாஜகவின் வெற்றிக்கு உதவிபுரிவார்கள் என்பது நமக்கு தெரியவில்லை..!
Discussion about this post