நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதனை சுருக்கமாக பார்ப்போம்.
நாடு முழுவதும் 50 இடங்களை தேர்வு செய்து சுற்றுலாவை மேம்படுத்த திட்டம் செய்யப்படும்….
நாடு முழுவதும் 10,000 உயிரி ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்படும் ….
செயற்கையாக உருவாக்கப்படும் வைரத்துக்கு சுங்க வரி குறைக்கப்படும்…
முதியோர் நிரந்தர வாய்ப்பு தொகை 15 லட்ச ரூபாயிலிருந்து இருந்து 30 லட்சமாக உயர்த்தபடும்….
மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் வெளியிட திட்டம் என்றும், இந்த திட்டத்தில் 7.5% வட்டி வழங்கப்படுவதாகவும், பெண் குழந்தைகள் 2 ஆண்டுகளுக்கு 2 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யபடலாம் என கூறினார்.
வரும் நிதியாண்டில் ஒன்றிய அரசின் நிதிப்பற்றாக்குறை 5.9 %-ஆக இருக்கும் என தெரிவித்த நிர்மலா சீதாராமன், உள்நாட்டில் செல்போன் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் செல்போன் உதிரிபாகங்களுக்கான சுங்கவரி குறைக்கப்படும் என தெரிவித்தார்.
அதேபோல், வீட்டுவசதி கடன் திட்டத்துக்கான நிதியை 66% கூடுதலாக உயர்த்தி 79,000 கோடியாக அதிகரிப்பு…
தங்கம், வெள்ளி வைர நகைகள் மீதான சுங்கவரி உயர்வு… வரும் நிதியாண்டில் 12.31 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க இலக்கு…
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிகரெட் மீதான சுங்கவரி அதிகரிப்பு…
வருமான வரிக்கான படிவம் எளிமையாக்கி புதுப்பிக்கப்படும்…
புதிய வரி விதிப்புத் திட்டத்தின் கீழ், தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு 5 லட்சத்திலிருந்து 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பழைய வரி விதிப்புத் திட்டத்தின் கீழ் வருமான வரிக்கான உச்ச வரம்பு 2.5 லட்சத்தில் இருந்து 3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.