தமிழகத்தில் மின்மாற்றிகள் மாற்றம்…!! அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்மாற்றிகள் முழுமையாக மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று சபாநாயக்கர் அப்பாவு தலைமையில் சட்டசபை கூட்டம் நடைப்பெற்றது. முன்னதாக மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அப்போது பேசிய தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “சென்னையில் 7 மின் கோட்டங்களில் மட்டுமே இன்னும் மேல்நிலை மின்சாரக் கம்பி வடங்கள் இருப்பதாகவும். அவற்றை புதைவிட கம்பிகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அம்பத்தூர் தொகுதியில் மின்சாரப்பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்றும் 150 மின் மாற்றிகளை மாற்றுவது குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதுவரையில் 11 ஆயிரத்து 509 மின்மாற்றிகள் முழுமையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து பேசிய ஆவர் மதுரை திருமங்கலம் தொகுதியில் புதிய மின் மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் திருப்போரூர், கோவலம் பகுதிகளில் துணை மின் நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.