ரஷ்யாவுக்கு எதிராக ஐநாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் இந்தியா மீண்டும் புறக்கணித்துள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து 8வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் கார்கிவ் நகரில் ரஷியா ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகள், குடியிருப்பு பகுதிகள் அழிந்து வருகின்றன. மேலும் பெரும் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. அதே நேரத்தில் உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இந்நிலையில், உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை வெளியேற்ற வலியுறுத்தி ஐநா பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 141 நாடுகள் வாக்களித்தன. இந்தியா,சீனா, கியூபா, உள்ளிட்ட 35 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்தன. ஐந்து நாடுகள் ஐ.நா.வின் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளது.