தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் தனி உலகத்தில் வாழ்கிறார் ஆளுநர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளர்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் , தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன், சாலையோர வியாபாரிகளுக்கான ஆதரவு, இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி, சிறு குறு தொழில் முனைவோருக்கு மேம்பாடு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது ,இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில்அமைச்சர் சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா ராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் எழிலன் மற்றும் தாயகம் கவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,
நீட் தேர்வில் மாணவர் உயிரிழப்பு வருந்தக்கூடிய ஒரு விஷயம் இரண்டு முறை நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்திருக்கிறார் இன்று அவருடைய தந்தையும் உயிரிழந்திருக்கிறார்கள் மிகவும் வருத்தத்துக்குரியது. ஒன்றிய பாஜக அரசு இதை மனதில் கொள்ளாமல் மாணவர்களுடைய வாழ்க்கையில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்டப் போராட்டத்தை தொடரும் மாணவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் முதல்வர் இதற்கான நடவடிக்கை எடுப்பார். எந்தவிதமான தவறான நடவடிக்கையில் மாணவர்கள் ஈடுபட வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநர் பேசுவது அவரது அறியாமையை காட்டுகிறது. மாணவர்களின் இறப்பை கொச்சைப்படுத்துகிறார். மாணவர்களின் கல்வி ஆர்வத்தை கொச்சைப்படுத்துகிறார். நீட் விவகாரத்தில் ஆளுநர் திமிராகப் பேசுகிறார். தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் தனி உலகத்தில் வாழ்கிறார் ஆளுநர்.