அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் மிக நீளமான தாடி வளர்த்ததற்கு கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவின் மிக்சிகனை சேர்ந்தவர் எரின் ஹனிகட் (38). இவரின் உடம்பில் பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம் (பிசிஓஎஸ்) என்ற பிரச்சினை இருக்கிறது. இதனால் ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய், எடை அதிகரிப்பு கருவுறாமை மற்றும் அதிகப்படியான முடி வளர்ச்சியை ஏற்படுத்தும். இதனால் எரினுக்கு தனது 13 வயதிலேயே முகத்தில் முடி வளர ஆரம்பித்துள்ளது.
ஒரு நாளைக்கு 3 முறை ஷேவிங் செய்தும், முடி அகற்றும் பொருட்களைப் பயன்படுத்தியும் தனது முகத்தில் வளரும் தாடியை எரின் கட்டுப்படுத்தி வந்துள்ளார். இருந்தும் முகத்தில் முடி வளர்ந்து கொண்டே இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து உயர் ரத்த அழுத்தத்தால் அவதிப்பட்டதால், கண் பக்கவாதம் காரணமாக தனது பார்வையையும் இழந்துள்ளார். அவரது கால்களில் ஒன்றின் கீழ் பாதி துண்டிக்கப்பட்டது. இதன் பின்னர், சவரம் செய்வதை நிறுத்தி விட்டார் எரின். கொரோனா காரணமாக உலகம் முடங்கிய நிலையில் தனது தாடியை மீண்டும் வளர்க்க எரின் முடிவு செய்தார்.