11ஆம் வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்கள்…
திருவள்ளூரில் 11ஆம் வகுப்பு மாணவன் மற்றும் பள்ளி அலுவலகப் பெண்ணை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே மணவாளநகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பார்த்திபன் என்ற மாணவன் 11ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் இருவர் கையில் வைத்திருந்த கத்தியால் மாணவனை வெட்டியுள்ளனர்.
இதைக்கண்ட அலுவலக பெண் ஊழியர் ஜெனிபர் மாணவனை காப்பாற்ற சென்றபோது அவரையும் அரிவாளால் வெட்டியுள்ளனர்.
பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் வருவதற்குள் அவர்கள் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றனர்.
பின் அவர்கள் இருவரையும் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பெயரில் அங்கு வந்த காவல்துறையினர் பெண்ஊழியர் ஜெனிஃபர் மற்றும் மாணவனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
