பதவி நாற்காலியை காப்பாற்றிக் கொள்ள பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வருகிறாரா..??
பதவி நாற்காலியை காப்பாற்றிக் கொள்ளவே பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாடு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் மூங்கில் தோட்டம் என்ற இடத்தில், 115 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து, 655 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பில், 12 ஆயிரத்து 653 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர் பேசிய அவர், தமிழ்நாட்டிற்கு நியாயமான நிதியை ஒதுக்காமல், வாக்கு சேகரிப்பதற்கு பிரதமர் மோடி இங்கு வருவதாக விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை அறிய “நீங்கள் நலமா” என்ற திட்டத்தை வரும் புதன்கிழமை தொடங்க இருப்பதாக கூறினார்.