தவெக – விசிக கூட்டணி…!! திருமாவளவன் தொண்டர்களுக்கு கடிதம்..!!
கடந்த மாதம் அக்டோபர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது..
அம்மாநாட்டில், “கூட்டணி கட்சி தலைவர்களும் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்கலாம்” என தலைவர் விஜய் அறிவித்திருந்தார். அவரின் அந்த சொல் பல ஆண்டுகளாக விசிகாவின் கோரிக்கையாகவே இருந்து வந்த நிலையில்,
தவெக தலைவர் விஜயின் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது..
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தலைவர் விஜய் பதில் அளித்துள்ளார்.. அதாவது தவெக தலைவர் விஜய் உடன் புத்தக வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்க இருப்பதாக சில தகவல்கள் பரவி வருகிறது.. அதனை யாரும் நம்ப வேண்டாம். என விசிக தொண்டர்களுக்கு திருமாவளவன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே, வணக்கம்..!
அண்மைக் காலமாக அரசியலரங்கில் நம்முடைய நிலைப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து பொதுவெளியில் தொடர் உரையாடல்கள் நிகழ்ந்து வருகின்றன. பல்வேறு ஊகங்களின் அடிப்படையில் அவை நிகழ்கின்றன. நம்மை ஆதரித்தோ எதிர்த்தோ ஊடகத்தளங்களில் பல்வேறு தரப்பினர் பேசி வருகின்றனர். அதாவது, அரசியலடிப்படையில்
நாம் குறி வைக்கப்பட்டிருக்கிறோம். அதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. நாம் ஆளுங்கட்சி திமுக தலைமையிலான “மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில்” இடம் பெற்றிருப்பது ஒரு காரணம். அதுவே முதன்மையான காரணமாகும். என இவ்வாரே அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..