வெளியான தனுஷ் 55 படத்தின் அப்டேட்..!! உற்சாகத்தில் ரசிகர்கள்..!!
தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய திரைக்கலைஞர்களின் முன்னிலையில் தனுஷ் என்பவர் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டு சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவர். தனுஷ் என்பவர் நடிகராகவும், பாடலாசிரியராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் பல வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்..
தனுஷின் இயக்கத்தில் மூன்றாவதாக வெளிவரவுள்ள படம் தான் “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்”.. இப்படம் அடுத்த மாதம் கிறுஸ்துமஸ் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது..
இந்நிலையில் தனுஷ் நடிக்கவுள்ள 55வது படம் குறித்து தகவல்கள் வெளியாக்கியுள்ளது. அதாவது இப்படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றுள்ளது..
இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..
இதற்கிடையில் தனுஷின் 52 வது படமான இட்லி கடை படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது..
தொடர்ச்சியாக தனுஷ் படங்கள் வெளிவர இருப்பது ரசிகர்களிடயே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது..