தவெக தலைவர் விஜய் நிர்வாகிகளுக்கு வேண்டுகோள்…!!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று விக்கிரவாண்டியில் பிரம்மாண்டாமாக 5லட்சம் நிர்வாகிகளுடன் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது..
அதை அடுத்து அந்த மாநாட்டில் அவர் பேசியது குறித்து பாராட்டும் விமர்சனங்களும் எழுந்துள்ளது…
தன்னுடைய முதல் மாநில மாநாட்டை நடத்தி முடித்துள்ளதால் தலைவர் அடுத்த மாஸ்டர் பிளான் ஒன்றை போட்டுள்ளார்.. அதாவது மாநிலம் முழுவதும் தன்னுடைய முதல் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக நேற்று அறிக்கை வெளியானது….
அதனை தொடர்ந்து இன்று பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலக்கத்தில் இன்று காலை தன்னுடைய நிர்வாகிகளை சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார்..
அதாவது மாநாட்டில் அவர் பேசிய குட்டி ஸ்டோரி., மற்றும் அரசியல் பேச்சுக்கள் மற்றும் அவர் அறிவித்த கொள்கை தலைவர்கள் குறித்து தற்போது தொடர் சர்ச்சைகள் எழுந்துள்ளது..
அதாவது விஜய் அரசியலுக்கு வந்த பின்னரே தலைவர்கள் சிலைக்கு மரியாதை செலுத்துவதாகவும்., இதற்கு முன் அவர் தலைவர்கள் பற்றி பேசியது இல்லை என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது…
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தலைவர் விஜய் தன்னுடைய தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.. அதாவது நம்மை பற்றி எழும் விமர்சனங்களுக்கு ஆதரங்களோடு பதில் கொடுங்கள்..
எதற்கும் அனாவசியமாக பதில் அளிக்க வேண்டாம்… என தன்னுடைய தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..