தவெக செயற்குழு கூட்டம்..!! 20 தீர்மானங்கள் நிறைவேற்றம்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டை கடந்த அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடத்தினார் விஜய். அதை அடுத்து அந்த மானாட்டில் அவர் பேசியது குறித்து பாராட்டும் விமர்சனங்களும் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் இன்று காலை பனையூரில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்..
அங்கு அவரை காண கட்சி நிர்வாகிகள் மட்டுமின்றி ரசிகர்களும் கூடினர்..
அதன் பின்னர்., இந்த ஆலோசனை கூட்டத்தில் கட்சியின் செயல் திட்டங்கள் என்ன..? கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன என்பது குறித்து ஆலோசனை செய்யவுள்ளதாகவும்., தவெக செயற்குழு கூட்டத்தில் 20க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது..
அதேபோல் மாநாட்டில் விஜய் பேசிய அரசியல் கருத்துக்கு பல்வேறு எதிர்கட்சி தலைவர்கள் தங்களுடைய விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.. மேலும் அவர்களின் விமர்சனங்கள் தொடர்பான கருத்துகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது…
முக்கியமாக தவெகவில் பெண்களுக்கு முக்கியதுவம் கொடுக்கப்படும் என்றும்.. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..