மத்திய கேபினட் செயலாளராக டிவி சோமநாதன் நியமனம்..! யார் இந்த ஐஏஎஸ் அதிகாரி..?
ஒன்றிய அமைச்சரவை செயலாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி டி.வி.சோமநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் முதல் மத்திய அமைச்சரவை செயலாளராக இருந்த ராஜீவ் கௌபாவுக்கு பதிலாக, இந்த ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி முதல் அடுத்த 2 ஆண்டுகளுக்கு மத்திய அமைச்சரவை பதவியில் மத்திய அமைச்சரவை செயலாளராக டி.வி. சோமநாதன் பதவி ஏற்கிறார்..
இது குறித்து ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மத்திய அமைச்சரவை செயலாளராக டி.வி.சோமநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் இப்பதவியில் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதியில் இருந்து 2 ஆண்டுகளுக்கு நீடிப்பார் எனவும் தெரிவித்துள்ளது.
ஒன்றிய அமைச்சரவையின் பணி நியமன குழு, டி.வி.சோமநாதனின் நியமனத்துக்கு ஒப்புதல் அளித்திருப்பதாகவும், ஒன்றிய அமைச்சரவை செயலகத்தின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரியாக சோமநாதன் செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் எம்.டி.யாக இருக்கும் சோமநாதன், 14,600 கோடியில் சென்னையில் புதிய மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான டெண்டர்களை வழங்குவதற்கும், அதில் நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் முக்கிய நபராக இருந்தவர் தான் சோமநாதன்.
அதன் பின்னர், மத்திய அரசின் பணிக்குச் சென்றார். கார்ப்பரேட் விவகாரத்தில் அமைச்சகத்தின் இணைச் செயலாளராகப் இருந்தவர். கடந்த 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளராக மத்திய அரசுப் பணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..