மதிமுக கட்சி 31ம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்..!!
மதிமுக கட்சி துவங்கி 31 வது வருடத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கட்சி கொடி ஏற்றி வைத்து தொண்டர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.
ஆண்டுதோறும் மே 6 ஆம் தேதி தொடக்க விழா கொண்டாடுவது வழக்கம். நடப்பாண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதால் தற்போது அந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டத்தில் நேற்று குளித்தலை நகரப் பகுதியில் 11 இடங்களில் கட்சி கொடி ஏற்றி வைத்து தொண்டர்களிடையே எழுச்சி ஏற்படுத்திய நிகழ்வு நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து இன்று கரூர் மற்றும் அரவக்குறிச்சி பகுதியில் 21 இடங்களில் கட்சி கொடி ஏற்றுவதற்கான நிகழ்வு கரூர் செங்குந்தபுரம் பகுதியில் உள்ள மதிமுக காட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது.
முன்னதாக கட்சியில் தொடர்ந்து 30 வருடங்களாக பணியாற்றி உடல் நலம் குன்றி கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த கட்சி நிர்வாகி தங்கவேல் திருவுருவப்படத்தை கட்சியின் மாநில துணை பொது செயலாளர் டாக்டர் ரஃபியா ஷேக் முகமது திறந்து வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் ஆசை சிவா, பொதுக்குழு உறுப்பினர் பழனிச்சாமி, மகளிர் அணி மாவட்ட செயலாளர் பாப்பாத்தி குமரேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கொடியேற்ற நிகழ்வை சிறப்பித்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..