இஞ்சி மரப்பா இனி வீட்டிலே செய்யலாம்..!
இஞ்சி மரப்பா என்பது செரிமான பிரச்சனைகள், தொண்டை பிரச்சனை, இருமல், வாந்தி மயக்கம் ஏற்ப்படுதல் ஆகிய பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவியாக இருக்கிறது.
நீண்ட நேர பயணத்தின்போது உண்டாகும் மயக்கம் வாந்தி ஆகிய உணர்வுகளில் இருந்து பாதுகாக்க இஞ்சி மரப்பா பயன்படுகிறது.
தேவையான பொருட்கள்:
- 100 கிராம் இஞ்சி
- 250 கிராம் சர்க்கரை
- ஒரு சிட்டிகை உப்பு
- அரை டீஸ்பூன் நெய்
செய்முறை:
- முதலில் இஞ்சியை சுத்தம் செய்து தோல் சீவி பின் நீரில் அலசி சின்ன சின்னதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் இஞ்சி துண்டுகளை சேர்த்து நீர் விட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு பாத்திரத்தில் அரைத்த இஞ்சியை மாற்றி அதனை இரண்டாக பிரித்து ஒரு பாதியை வடிகட்டி ஜூஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு வாணலை அடுப்பில் வைத்து இஞ்சி ஜூஸ் மற்றும் அரைத்த இஞ்சி கலவையை ஊற்றவும்.
- இதன் கூடவே சர்க்கரை, ஒரு சிட்டிகை உப்பு, சிறிது நெய் சேர்த்து நன்றாக கலந்து விட்டு கெட்டியாகும் வரை கிளறி விட வேண்டும்.
- நன்றாக கெட்டியானதும் தொட்டுபார்த்தால் கைகளில் ஒட்டும் அந்த பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
- ஒரு தட்டில் நெய் தடவி அதில் இந்த கலவை ஊற்றி ஆறவைக்க அப்படியே கெட்டியாகும்.
- பின் அதனை கத்தியால் வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- அவ்வளவுதான் இஞ்சி மரப்பா தயார். இனி வீட்டிலே இஞ்சி மரப்பா செய்து ருசிக்கலாம்.