40 வயதிலும் அழகாக தெரிய இதை ட்ரை பண்ணுங்க..!!
பெண்களுக்கு வயது அதிகமாக அதிகமாக சரும மாற்றங்கள் ஏற்படும். இந்த சரும மாற்றம் முக அழகை குறைத்துக் கொண்டே வரும். 40 வயதிலும் என்று அழகாக தெரிய இதை ட்ரை பண்ணுங்க..
* தினமும் முகத்திற்கு கிளென்சிங், டோனிங், மற்றும் மாய்ஸ்ட்ரைசர் பயன் படுத்த வேண்டும். இதனால் சருமம் பாதுகாக்கப்பட்டு, முகத்தில் சுருக்கம் விளாமல் பார்த்துக்கொள்ளும். தினமும் பயன்படுத்துவதால் சுருக்கத்தை குறைத்து, முகத்தில் இறந்த செல்களை நீக்க உதவும்.
* வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வெளியே செல்லும் பொழுது சன்ஸ்க்ரீன் பயன்படுத்த வேண்டும். இவை சூரிய கதிர் வீச்சில் இருந்து பாதுகாத்து, முகம் கருக்காமல் இருக்கச் செய்வதோடு, முகம் சுருங்காமலும் பார்த்துக்கொள்ளும்.
* தோல் தளர்வை போக்க, தினமும் அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். சருமத்தில் நீரேற்றத்தை தக்க வைத்துக்கொள்வதன் மூலம். என்றும் இளமையான தோற்றத்தை கொடுக்கும்.
* முக்கியமான ஒன்று ஐ க்ரீம், முகத்தை எவ்வளவு தான் மேக்கப் போட்டு மறைத்தாலும், கருவளையம் இருந்தால் காட்டி கொடுத்துவிடும். ஐக்ரீம் பயன் படுத்துவதன் மூலம், கருவளையத்தை தடுத்திட முடியும்.
* கண்கள் அதிக சோர்வில் இருந்தால் கூட, பார்ப்பதற்கு முகம் அழகாக இல்லாமல் போய்விடும் எனவே வெள்ளரிக்காயை துண்டை எடுத்து கண்களின் மேல் தினமும் 15 நிமிடம் வைத்தால், கண்கள் சோர்வாக இருக்காது.
* அழகை அதிகரிக்க சில பெண்கள் மேக்கப் போடுவது வழக்கம். ரசாயனமற்ற மேக்கப் கிட் பயன்படுத்துவது முகத்திற்கு சிறந்தது.
* ஆரோக்கியமான உணவு மிக முக்கியமான ஒன்று, தினமும் காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், சருமம் அழகாக இருக்கும்.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..