இந்தியாவும் பாரத்தும் ஒன்றுதான் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஜி20 உச்சி மாநாடு இந்தியாவில் நடைப்பெற உள்ள நிலையில் அதற்கான இந்திய அழைப்பிதழில் இந்தியாவுக்கு பதிலாக பாரத் என குறிப்பிட்டிருந்தது. அனைத்து தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக எதிர்கட்சிகள் தங்களது கடுமையான கண்டனத்தையும் பதிவு செய்து வருகின்றன. மேலும் நடைபெறும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் இந்தியா பெயர் மாற்றம் குறித்து மசோதா தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது மக்களிடையே பெரும் எதிர்ப்பைக் கிளப்பிய நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
இந்திய அரசியல் சாசனத்தில் இந்தியா என்ற பாரத் என இருக்கிறது. இந்தியாவும் இருக்கிறது. பாரத்தும் இருக்கிறது. நாம் இந்தியாவையும் பயன்படுத்துகிறோம். பாரத்தையும் பயன்படுத்துகிறோம். பிரதமர் மோடிக்கு திடீரென இந்தியா மீது என்ன கோபம்?.
எதிர்க்கட்சிகள் கூட்டணியை (I.N.D.I.A)என சுருக்கி எழுதுவதால் கோபம் வந்துள்ளது. நாங்கள் பாரத் என பெயரை சுருக்கி வைத்தால், பிரதமர் மோடி பாரத் பெயரையும் மாற்றி விடுவாரா?. இதெல்லாம் சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகள். இந்தியா என்பதும் ஒன்றுதான். பாரத் என்பதும் என்றுதான். இவ்வாறு ப. சிதம்பரம் தெரிவித்தார்.