அழகான சருமத்திற்கு இதை ட்ரை பண்ணுங்க..!!
முக அழகை பாதுகாக்க பல வழிமுறைகளை பின் பற்றுகிறோம்.., அதிலும் தற்போது கோடைக்காலம் என்பதால் சொல்லவே வேண்டாம்.., அடிக்கும் வெயிலுக்கு முகம் கருத்து விடும்.
முகம் கருக்காமல் இருக்க சிலர் சன் ஸ்கீரின் பயன் படுத்துவது உண்டு. அதிலும் சிலருக்கு அலர்ஜி என்று சில லோஷன் மற்றும் கீரிம்கள் பயன் படுத்த மறுப்பார்கள். எந்த வித கெமிக்களும் இல்ல இயற்கையாக முக அழகை பராமரிக்க நினைப்பவர்களுக்கு மட்டுமே இந்த குறிப்பு..
இதற்கு பெரிதும் உதவுவது மாதுளைப்பழம் தான்.., தினமும் ஒரு மாதுளை எடுத்துக் கொண்டால், உடலுக்கும் முகத்திற்கும் நல்லது.
அதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் சருமத்தை என்றும் அழகாக வைக்க உதவுகிறது. இதை ஃபேஸ் பாக் ஆகவும் பயன் படுத்தாலம்.
மாதுளை பேஸ் பாக் செய்ய தேவையான பொருட்கள் :
மாதுளை பொடி – 1 டேபிள் ஸ்பூன்,
தேன் – 1 டேபிள் ஸ்பூன்,
எலும்பிச்சை சாறு – 3 துளிகள்,
தயிர் – 1 ஸ்பூன்,
பால் – 2 ஸ்பூன்
சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் பூசி.., 20 நிமிடம் முகத்தில் ஊற வைக்க வேண்டும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ்பாக் சருமத்தில் உள்ள அழுக்கை நீக்கி, முகம் என்றும் பொலிவுடன் வைக்க உதவுகிறது.
இந்த ஃபேஸ்பாக் பயன் படுத்துவதன் மூலம், கரும்ப்புள்ளி, தழும்பு மற்றும் முகப்பருக்களும் நீங்கி விடும். முதுமை தோற்றம் ஏற்படாமலும் தடுக்கும்.
எனவே இதை எந்த வயதினரும் பயன் படுத்தலாம்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி.