உண்மையான காதலுக்கு வயது இல்லை..! படிக்க மறக்காதீர்கள்.
சிவாகாசியை சேர்ந்த பிவிபி நாராயணன் எனும் 70 வயது முதியவர் ஒருவர், 8 ஆண்டுகளுக்கு முன் மனைவியை இழந்துள்ளார்.
மனைவி இறந்து 8 ஆண்டுகள் ஆகியும் அவரை மறக்காமல்.., என்றும் என்னுடனே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 9 லட்சம் ரூபாய் கொடுத்து சிலிக்கான் சிலை ஒன்றை வடிவமைத்துள்ளார்.
என் மனைவி இறந்து சில மாதத்திலேயே நான் தொழில் செய்யும் இடத்தில் 2 லட்சம் ரூபாய்க்கு சிலை வைத்தேன், இருந்து அவள் என்னோடு இருப்பது போன்று எனக்கு மன நிறைவு கொடுக்கவில்லை.
இதை பற்றி சக நண்பர்களிடம் கேட்ட பொழுது அவர்கள் இந்த ஐடியா கொடுத்தார்கள், பின் சிலிகான் சிலையை என் சொந்த உழைப்பில் வடிவமைக்க வேண்டும் என்று.., 8 வருடம் அயராது உழைத்தேன். 8 வருடங்கள் கழித்து 9 லட்சம் ரூபாய் கொடுத்து சிலிகான் சிலையை வடிமைத்தேன்.
இதை ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும் அவள் என்னுடனே இருப்பது போன்று இருக்கிறது. இந்த 8 ஆண்டு நாங்கள் பிரிந்து இருப்பதே எங்களுக்கு வேதனையாக இருந்தது, இப்பொழுது தான் எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என.., தன் மனைவியின் சிலிகான் சிலைக்கு முத்தம் இட்டு கூறினார்.
பார்க்கும் அனைவரின் கண்களிலும் ஆனந்த கண்ணீர் வந்தாலும், உண்மையான காதல் என்றால் இதுதான் என்று உணர்த்தும் படியும் இருந்தது.
-வெ.லோகேஸ்வரி.