சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘பாபா’, விஜயுடன் ‘பகவதி’ ‘கில்லி’, விக்ரமுடன் ‘தில்’ உள்ளிட்ட ஏராளமான தமிழ் படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஒடியா, மராத்தி, பெங்காலி உள்ளிட்ட 11 மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது 60 வயதாகும் இவர் 33 வயதான பெண் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளது சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஷிஷ் வித்யார்த்தி, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரூபாலி பருவா என்ற பெண்மணியை பதிவுத்திருமணம் செய்துள்ளார். இவர் குவாஹத்தியைச் சேர்ந்த வளர்ந்த வரும் பெண் தொழில்முனைவோர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்றதாக கூறப்படுகிறது.
கொல்கத்தாவைச் சேர்ந்த நடிகை சாகுந்தலா பருவாவின் மகளான ராஜோஷி பருவா என்பவரை, நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி முதலாவதாக மணம் முடித்திருந்தார். இந்த தம்பதிக்கு ஆர்த் வித்யார்த்தி என்ற மகன் உள்ளார்.
ஆஷிஷ் வித்யார்த்தியின் முதல் மனைவி ராஜோஷி பருவா தனது சமூக வலைத்தளத்தில் இந்த திருமணம் குறித்து மறைமுகமாக பதிவு செய்துள்ள கருத்து வைரலாகி வருகிறது. அதாவது, “ஒரு சரியான நபர் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்ற கேள்வியை கேட்க மாட்டார். அதேபோல் உங்கள் மனம் புண்படும்படி நடந்து கொள்ள மாட்டார் அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” என ஆஷிஷ் வித்யார்த்தியை மறைமுகமாக சாடியுள்ளார்.
Discussion about this post