கணவரை காப்பாற்ற முயற்சி.. மனைவி உயிரிழந்த சோகம்..!
ஆந்திர மாநிலம் பத்ராத்திரி மாவட்டத்தில் உள்ள பாண்டுரங்கபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் சர்வேஷ் – சம்மக்கா தம்பதி. மளிகைக் கடை நடத்தி வரும் இவர்கள், சம்பவத்தன்று, தங்களது கடையில் வழக்கமான பணியில் இருந்துள்ளனர். அப்போது, கடையில் இருந்த பொருட்களை, சர்வேஷ் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில், மின்சாரம் தாக்கி, இவர் அலறியுள்ளார். இந்த சத்தத்தை கேட்டு வந்த சம்மக்கா, தனது கணவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். இந்த முயற்சியில், சர்வேஷ் தப்பித்த நிலையில், சம்மக்காவின் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதையடுத்து, அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர், சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். கணவரை காப்பாற்றும் முயற்சியில், மனைவி உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-பவானி கார்த்திக்