நடத்தையில் சந்தேகம்.. விடுதி அறையில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. கணவனே செய்த சம்பவம்..
புதுச்சேரியில் உள்ள வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப். புகைப்படக் கலைஞராக இருக்கும் இவர், தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த அபூர்வா என்ற பெண்ணை, காதலித்து, பதிவு திருமணம் செய்துக் கொண்டார்.
ஆனால், இந்த திருமணம் குறித்து பெற்றோர்களிடம் தெரிவிக்காத இருவரும், வார இறுதி நாட்களில் மட்டும், தனியார் விடுதியில், அறை எடுத்து தங்கி வந்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்றும், இருவரும் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது, அபூர்வாவின் நடத்தையில், பிரதீப்புக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சந்தேகத்தின் விளைவாக, தனது மனைவியை, அவர் கடுமையாக அடித்துள்ளார்.
இந்த தாக்குதலில் மயக்கம் அடைந்த அவரை, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். ஆனால், இவர் தாக்கப்பட்ட தகவல் குறித்து அறிந்த காவல்துறையினர், பிரதீப்பை கைது செய்து, கொலை முயற்சி வழக்கை பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக விசாரணை நடந்து வந்த நிலையில், சமீபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அபூர்வா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால், கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்கமாக மாற்றிய காவல்துறையினர், பிரதீப்பை சிறையில் அடைத்துள்ளனர்.
-பவானி கார்த்திக்