திருச்சி எஸ்.பி வருண்குமார் அவதூறு வழக்கு..!! சீமான் சொன்ன பதில்..!!
திருச்சி எஸ்.பி வருண்குமார் பற்றி அவதூறாக பேசி அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருச்சி எஸ்.பி வருண்குமாரை பற்றி அவதூறாக பேசி அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட தூண்டியது சீமான் என தெரிய வந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட 22 நிர்வாகிகள் மீதும் திருச்சி தில்லை நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
கடந்த சில மாதங்களாகவே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கும் எஸ்பி வருண்குமார் இருவருக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோதல் நிலவி வந்த நிலையில்., அதை பற்றி ஆரம்பத்திலேயே வருண் குமார் சீமானை எச்சரித்துள்ளார்..
இப்படி இருக்க நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியது மட்டுமின்றி செம்மொழி பூங்கா குறித்தும் அவதூறாக பேசியுள்ளார்.. அந்த வழக்கில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன்.. திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து துரைமுருகனை கைது செய்ய காரணம் எஸ்பி வருண்குமார் காட்டும் சாதி ரீதியான பாகுபாடு என சீமான் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.. அதோடு மட்டுமின்றி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற நாதக கூட்டத்தில் சீமான்., எஸ்.பி.வருண்குமார் மட்டுமின்றி அனைத்து காவலர்களையும் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
மேலும் ஆபாச வார்த்தைகளால் திட்டியும், அடுகடுக்கான பொய்களை முன்வைத்து சீமான் பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது.. அதை வீடியோவாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஷேர் செய்திருந்த வருண்குமார் ஐபிஎஸ் தமிழக மக்கள் இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என தெரிவித்திருந்தார். மேலும் இது தொடர்பாக சீமானுக்கு எஸ்பி வருண்குமார் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..