கிணற்றுக்கு அடியில் புதையல்..!! தங்க காசுகள் விற்பனை..!! மர்ம கும்பல் கைது..!!
போலி தங்க நகைகளை 36 லட்ச ரூபாய்க்கு விற்க முயன்ற ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த முறையார் பகுதியில் போலி தங்க காசுகளை சிலர் ஏமாற்றி விற்பனை செய்துவருவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது., தகவலின் பேரில் அந்த இடத்திற்கு சென்று சந்தேகிக்கும் விதமாக சுற்றி திரிந்த கும்பலை காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் தனி பிரிவு போலிசார் ஸ்கார்பியோ காரில் இருந்து இறங்கி தர்மலிங்கம் சுற்றும முற்றும் பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென அருகில் இருசக்கர வாகனத்தில் நகையை வாங்க சென்னையில் இருந்து வந்த கமல் ராம்குமார் இருவரும் இறங்கி தர்மலிங்கத்துடன் பேசிக் கொண்டிருந்த போது இதனை கண்காணித்துக் கொண்டிருந்த காவல்துறையினர் திடீரென சுற்றிவளைத்தனர்.
இதில் கமல் மற்றும் ராம்குமார் ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளனர். தர்மலிங்கம் உட்பட காரில் இருந்த ஐந்து பேரையும் சேர்த்து காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து அவர்களிடமிருந்த இரண்டு கிலோ போலி தங்க காசுகளையும் பறிமுதல் செய்து செங்கம் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.. கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு தர்மலிங்கம் தனது நிலத்தில் கிணறு தோண்டிய போது புதையல் கிடைத்ததாகவும் அதில் 400 கிராம் தங்க காசுகள் உள்ளதாகவும் கூறி ஏமாற்றி அந்தப் போலி தங்க நாணயங்களை சென்னையைச் சேர்ந்த சிலருக்கு நான்கு லட்ச ரூபாய்க்கு விற்று அவர்கள் சென்னையைச் சென்று நகைகளை சரி பார்த்தபோது அவை போலியானவை என்ன தெரிய வந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
போலி தங்க காசுகளை விற்பனை செய்து வரும் இந்த கும்பல் இன்று அந்த பகுதியில் மற்ற நபர்களை விற்பனை செய்ய வருவதை தெரிந்து கொண்ட சில மர்ம நபர்கள் இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் அளித்ததன் பேரில் இந்த கும்பலை பிடித்ததுடன் அவர்களிடம் இருந்து 36 லட்சம் ரூபாயை காவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்..
முதலாவதாக இந்த கும்பல் தாங்கள் கிணறு வெட்டும் தொழில் செய்து வருகிறோம் எனக்கூறி கிணறு வெட்டி அப்பொழுது தங்களுக்கு புதையல் கிடைத்துள்ளதாகவும் அந்த புதையலில் தங்க காசுகள் மற்றும் தங்க ஆபரணங்கள் விலைமதிக்க முடியாத பொருட்கள் உள்ளதாக நகைகள் வாங்கும் கும்பலிடம் பேரம் பேசி அவர்களிடம் தரத்தை பரிசோதிக்க உண்மையான தங்க நாணயங்களை தந்தும் பரிசோதனை செய்த பின்பு போலி தங்க நகைகளை தந்து பணத்தை வாங்கிக் கொண்டு தலைமறைவாகி விடுவதும் என தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..