அர்ஜுன் சம்பத்தை நோக்கி பாய்ந்த செருப்பு..!! மதிவதனி கொடுத்த பதில்..!!
தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் வழக்கறிஞர் மதிவதனி பேசிக் கொண்டிருந்த போது இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், அவரை நோக்கி ஆவேசமாக பாய்ந்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தனியார் தொலைக்காட்சி சார்பில் விவாத நிகழ்ச்சியில் திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். திமுக சார்பில் எழும்பூர் எம்.எல்.ஏ பரந்தாமன், விசிக சார்பில் எம்.எல்.ஏ ஆளூர் ஷா நவாஸ், திராவிடர் கழகம் சார்பில் வழக்கறிஞர் மதிவதனி, பாஜக சார்பில் கரு நாகராஜன், இந்து மக்கள் கட்சி சார்பில் அர்ஜுன் சம்பத் ஆகியோர் இந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மேலும், பல்வேறு அரசியல் இயக்கங்கள் சார்பில் ஏராளமானோர் பார்வையாளர்களாகவும் இந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது, திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் மதிவதனி பேசும்போது, ஆத்திரமடைந்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வேகமாக எழுந்து ஆவேசமாக வாக்குவாதம் செய்தார்.
இக்கூட்டத்தில் இருந்த பார்வையாளர்கள், செருப்பை எடுத்து வீச முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார் மேடைக்கு வந்து மோதல் ஏற்படாமல் தடுத்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அர்ஜூன் சம்பத்தின் செயல் எனக்கு எந்தவித தடுமாற்றத்தையும் கொடுக்கவில்லை, அசிங்கத்தில் துர்நாற்றம் தான் வரும், அதில் நறுமணத்தையா எதிர்பார்க்க முடியும்..? என்ற வகையில் நான் கடந்து சென்றுவிட்டேன் என தெரிவித்தார்.
ஆனால் இந்த சம்பவத்தை பார்த்த பலரும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். அதற்கு மதிவதனி தனித்தனியாக நன்றி சொல்ல முடியவில்லை எனவும் தொடர்ந்து ஆதரவு அளித்த அனைவருக்கும் மதிவதனி. நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கறிஞர் மதிவதனி சமூக வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது “தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அர்ஜூன் சம்பத் செய்த ரவுடித்தனத்திற்கும், அவர்களின் ஏவல் ஆட்களின் வெற்றுக் கூச்சலுக்கும் எதிர்ப்பு தெரிவித்தும், தக்க பதிலடி கொடுத்துள்ளேன்.. அதனை புரிந்து கொண்டு எப்போதும் நீ எங்கள் பிள்ளை என கூறி எனக்கு ஆதரவு கொடுத்து., தொலைபேசி, ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் என்று அனைத்து சமூக வலைத்தளத்திலும் இந்த தகவலை பகிர்ந்து உண்மையை உறக்க எடுத்து சொல்லி ஏன்னுடன் நின்ற தோழர்கள் அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்…
– கவி பிரியா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..