சிக்கிய போதை ஆசாமிகள்..!! அதிரடி ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்..!!
திருப்பூர் மாநகரில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் நடைபெற்ற சோதனையில் இரண்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 13 கிலோ கஞ்சா பறிமுதல்., நான்கு பேர் கைது…
திருப்பூர் மாநகரில் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் மாநகர காவல் ஆணையர் லட்சுமி தனிப் படைகளை அமைத்து தீவிர ரோந்து பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதன்படி தனிப்படை போலீசார் மாநகரப் பகுதி முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் பின்புறம் தெற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரஜினிகாந்த் தலைமையிலான தனிப்படை போலீசார்
தீவிர சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வட மாநில வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து விசாரண மேற்கொண்டதில், மேற்கு வங்கத்தை சேர்ந்த மனிருள் காசி (31) இவர் வடமாநிலங்களில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து திருப்பூரில் விற்பனை செய்து வந்துள்ளார். இவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் விற்பனையில் ஈடுபட்டு வந்த வாரணாசி பாளையம் பிரிவு மூகாம்பிகை நகர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் ( 32) என்பவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து மனிருள் காசி அளித்த தகவலின் அடிப்படையில் திருமுருகன் பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வாவிபாளையம் பகுதியில் தனிப்படை போலீசார் வாவிபாளையம் செரங்காடு பகுதியை சேர்ந்த மேகநாதன் (23) மற்றும் வாவிபாளையம் குருவாயூரப்பன் நகர் பகுதியை சேர்ந்த சிவசங்கர் (22) ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மேலும் 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தனிப்படை அமைக்கப்பட்டதை தொடர்ந்து ஒரே நாளில் மாநகரின் இரு வேறு பகுதிகளில் 13 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அதிரடியாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் போலீசாரின் தீவிர கண்காணிப்பு தொடர்ந்து நடைபெறும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..