கஞ்சா தடுப்பு வேட்டை.. சிக்கிய கும்பல்..!! அடுத்த கட்ட நடவடிக்கை..?
ஆந்திரா சேலம் பேருந்தில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சா பறிமுதல் காட்பாடி போலீசார் நடவடிக்கை..
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தமிழக ஆந்திர மாநில எல்லையான கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் காட்பாடி காவல் நிலைய போலீசார் கஞ்சா தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திரா மாநிலம் திருப்பதியில் இருந்து சேலம் செல்லும் பேருந்தில் சோதனை செய்துள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக அமர்ந்திருந்த நபரின் சீட்டுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த பையை போலீசார் சோதனை செய்ததில் கஞ்சா இருந்தது தெரிந்தது. பின்னர் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கன்னியாகுமரியை சேர்ந்த கணேசன் என்பதும் சுமார் 8 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக கடத்திச் சென்றதும் தெரிந்தது. பின்னர் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கைதான கணேசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..